Tuesday, April 8, 2014

அவமானப்பட வேண்டிய விஷயம்!-3 மனித மலத்தை அள்ளும் கொடுமை!
மனித மலத்தை மனிதன் அள்ளுவது மிகக் கொடுமையானது.
இது ஒழிக்கப்பட வேண்டும் என நமது குழுமத்தில் நண்பர்கள் பகிர்ந்திருந்தனர்.
L    எந்தெந்த மாநிலங்களில் இந்தக் கொடுமை நடக்கின்றது?
L    என்ன அளவில் இக்கொடுமை நடக்கின்றது என இந்த மெயிலில் பார்ப்போம்.
அவற்றைப் பார்த்தபின் இது பற்றி பேசிபவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள தொடர்பை அறியலாம்.
இதுவும் சென்சஸ் ஆப் இந்தியா இணையத் தளத்தில் மாநில வாரியாக உள்ள புள்ளி விவரங்களில் எடுக்கப்பட்டவை.
’மோடிபோபியா’
அதிலிருந்து எடுக்கப்பட்ட வேறு பல புள்ளி விவரங்கள் மூலம்
L    34 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியில் கழிப்பறைகள் வசதி இல்லாத குடும்பங்கள் பற்றியும்,
L    பள்ளிகளில் கழிப்பறை வசதிக் குறைபாடு நாட்டில் மோசமான பெரிய மாநிலமாக மேற்கு வங்காளம் விளங்குவதையும்,
L    மனித மலத்தை மனிதன் அள்ளும் கொடுமை மேற்கு வங்காளத்தில் மிக அதிகமாக நடக்கும் (உத்திரப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக) நிலவுவதையும் அறிய முடிந்தது.
ஒரு விசயத்தில் குஜராத் மோசமாக  உள்ளது என்பதற்கான ஆதாரங்கள் பற்றி பேசுபவர்கள் சற்று மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பேச வேண்டும் என்பதை இந்த தொடர் மெயில்கள் உறுதிப்படுத்தும்.
தொடர்ச்சியாக ’மோடிபோபியா’ காரணமாக கருத்துக்களை கூறுபவர்கள் அதன் விளைவாக வெளிப்படும் இது போன்ற புள்ளிவிவரங்கள், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் ஆகியவற்றை நினைத்துப் பார்க்கட்டும்.
தமிழகத்திலும் இது பெரிய மாநிலங்களில் மூன்றாவது மோசமானதாக இவ்விசயத்தில் உள்ளது நம் அனைவர்க்கும் தலை குனிவே.
மனிதமலத்தை அள்ள மனிதனை பயன்படுத்தும் குடும்பங்கள் 
ஒட்டுமொத்தமாக (கிராமம்+நகரம்)
எத்தனை குடும்பங்கள் மனிதமலத்தை அள்ள மனிதனை பயன்படுத்துகின்றன என்பது கீழே உள்ள பட்டியலில்.
மாநிலம்
மொத்த குடும்பங்கள்
மனிதனை பயன்படுத்துபவை
உத்திரப்பிரதேசம்
3,29,24,266
3,26,082
மேற்குவங்காளம்
2,00,67,299
1,30,330
தமிழ்நாடு
1,84,93,003
27,659
பீஹார்
1,89,40,629
13,587
ஆந்திரா
2,10,24,534
10,357
மகாராக்ஷ்டிரா
2,38,30,580
9,622
கர்நாடகா
1,31,79,911
7,740
மத்தியப்பிரதேசம்
1,49,67,597
5,664
ராஜஸ்தான்
1,25,81,303
2,572
குஜராத்
1,21,81,718
2,566
அடுத்ததாக,
கிராமங்களில்
கிராமங்களில் எத்தனை குடும்பங்கள் மனிதமலத்தை அள்ள மனிதனை பயன்படுத்துகின்றன என்பது கீழே உள்ள பட்டியலில்.
மாநிலம்
மொத்த குடும்பங்கள்
மனிதனை பயன்படுத்துபவை
உத்திரப்பிரதேசம்
2,54,75,071
2,19,409
மேற்குவங்காளம்
1,37,17,186
1,15,928
தமிழ்நாடு
95,63,899
10,245
பீஹார்
1,69,26,958
9,765
மகாராக்ஷ்டிரா
1,30,16,652
4,291
ஆந்திரா
1,42,46,309
3,246
மத்தியப்பிரதேசம்
1,11,22,365
2,947
கர்நாடகா
78,64,196
2,052
குஜராத்
67,65,403
1,408
ராஜஸ்தான்
94,90,363
772
அடுத்ததாக,
நகரங்களில்
நகரங்களில் எத்தனை குடும்பங்கள் மனிதமலத்தை அள்ள மனிதனை பயன்படுத்துகின்றன என்பது கீழே உள்ள பட்டியலில்.
மாநிலம்
மொத்த குடும்பங்கள்
மனிதனை பயன்படுத்துபவை
உத்திரப்பிரதேசம்
74,49,195
1,06,681
தமிழ்நாடு
89,29,104
17,414
மேற்கு வங்காளம்
63,50,113
14,402
ஆந்திரா
67,50,113
7,111
கர்நாடகா
53,15,715
5,688
மகாராக்ஷ்டிரா
1,08,13,928
5,331
பீஹார்
20,13,671
3,822
மத்தியப்பிரதேசம்
38,45,232
2,717
ராஜஸ்தான்
30,90,940
1,800
குஜராத்
54,16,315
1,158

தொடரும்.

நன்றி!

ல.கருப்பசாமி.

எங்கு அநீதி பெரியதாக இருக்கிறதோ
எங்கு அநீதி முனைப்புடன் இருக்கிறதோ
எங்கு அநீதி வலிமையுடன் இருக்கிறதோ

அங்கு நாங்கள் களைப்படையாதிருக்கட்டும்!
கழிப்பறை வசதிகள் பற்றிய தகவல்களுக்கு ஆதாரம்
முதலில் http://censusindia.gov.in/  என்ற இணையத் தள முகவரிக்கு செல்ல வேண்டும்.
அடுத்து அங்கு 2011 census data என்ற தலைப்பில் சென்றால் தோன்றும் பட்டியல் வரிசையில் இரண்டாவதான  Houselisting and Housing Census Data Tables (India & States/UTs - District Level) என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதில் மாநிலங்கள் பெயர்கள் இருக்கும். அதில் தேவையான மாநிலத்தில் நுழைந்து பார்த்தோமானால் மீண்டும் ஒரு பட்டியல் இருக்கும். அதில் வரிசைப்படி பத்தாவதான HH-8 : Households By Availability of Type of Latrine Facility  என்ற PDF பைலை நீங்கள் பார்த்தால் அதில் அந்த மாநிலத்தின் மாவட்ட வாரியாக கழிப்பறை வசதிகள் பற்றிய விவரங்கள் இருக்கும்.
ஒவ்வொரு மாநிலத்தின் PDF பைலாக பார்த்து அதில் எனக்கு தேவையான விவரங்களை எடுத்துக் கொண்டதன் மூலம்தான் எனது மெயிலுக்கான தகவல்களை பெற முடிந்தது.
முழுமையாக தயார் செய்ய எனக்கு நான்கு நாட்கள் ஆனது. கிட்டத்தட்ட 8-10 மணி நேரம்.

No comments:

Post a Comment